பாஜகவில் இருந்து 3 பேரை அதிரடியாக நீக்கம் செய்து அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் உள்பட 3 பேர் நீக்கப்பட்டுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதாவது, பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, ஏற்கனவே 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது மேலும் 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவர் செந்தில் குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பொன் பாஸ்கர், முத்துராஜ் ஆகியோரை நீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.