fbpx

இன்று வெளியானது ’ஜவான்’ திரைப்படம்..!! நயன்தாரா வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா..?

இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திரைப்படங்களில் ஒன்று ஜவான் திரைப்படம். விஜய்யின் பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே இப்படத்தினுடைய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. இந்நிலையில், இன்று ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே, தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். படத்தில் அவரது ரோலுக்கு முக்கியத்துவம் அதிகம் இருப்பது ட்ரைலர் பார்க்கும்போதே தெரிந்தாலும், அவர் எந்த விதமான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பவம் ரூ.11 கோடி என்று கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் நடிக்கும்போது கிடைக்கும் சம்பளத்தை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

உதயநிதியை விடுங்க..!! ஆ.ராசா சொன்னத பாருங்க..!! சனாதனம் தொழுநோய், எச்.ஐ.வி.யாம்..!! நாள் குறியுங்கள் நான் வருகிறேன்..!!

Thu Sep 7 , 2023
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்பி ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய திமுக பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்தியா முழுவதும் விவாதப்பொருள் ஆகியுள்ளது. […]

You May Like