fbpx

அண்ணியாரே எல்லாம் உன்னால தானே….! மகள் காதலனோடு ஓடியதால், கடுப்பான தந்தை செய்த கொடூர செயல்…..!

தற்போதைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகளோ அல்லது ஆண் பிள்ளைகளோ யாராக இருந்தாலும், அவரவர் வழக்கைக்கான முடிவை அவரவர்களே எடுத்துக்கொள்கிறார்கள் பெற்றோர்களை கண்டு கொள்வதில்லை. ஆனால் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் மீது இருக்கும் அக்கறை காரணமாக, பிள்ளைகள் எப்போதும் நம்முடைய கண்காணிப்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால், தற்காலத்து தலைமுறையினர், யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதற்கு விரும்புவதில்லை. எப்போதும் அவர்கள் சுதந்திர பறவையாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

அந்த வகையில், சேலம் அருகே, தன்னுடைய மகள், அவருடைய காதலனுடன் வீட்டை விட்டு சென்றதால் கடுப்பான தந்தை, மகள் காதலனோடு ஓடியதற்கு காரணம் அவருடைய அண்ணி தான் என்று சந்தேகப்பட்டு, கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி சேர்ந்தவர் கண்ணன் , இவர் அந்த பகுதியில் முடி திருத்தும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கண்ணனின் தம்பியான கர்ணன் என்பவர் அண்ணனோடு, முடி திருத்தும் கடையில், அவருக்கு உதவியாக இருந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தான் கர்ணனின் மகள் ராஜேஸ்வரி என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞரின் பெயர் மோகன்லால் என்று சொல்லப்படுகிறது.

இருவரும் உயிருக்கு, உயிராக காதலித்து வந்தனர். ஆனால் பெற்றோர்கள் தரப்பில் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த காதலர்கள் வீட்டை விட்டு, வெளியேற முடிவு செய்தனர்.

காதலர்கள் இருவரும் திட்டமிட்டபடி கலந்த 13ஆம் தேதி திடீரென்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் காரணமாக, வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் இருவரையும் காணவில்லை என்று, பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனாலும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே ராஜேஸ்வரி, மோகன்லால் உள்ளிட்டோர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இவர்களுடைய திருமணத்திற்கு பெற்றோர் தரப்பில், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் பயந்து போன காதல் தம்பதிகள் இருவரும், காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். உடனடியாக காவல்துறையினர் இருவரின் பெற்றோருக்கும் தகவல் அனுப்பி, அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ராஜேஸ்வரி தன்னுடைய கணவனோடு செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார்.

ஆகவே, ராஜேஸ்வரியின் விருப்பப்படி, அவரை, அவருடைய கணவரோடு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை, காதல் தம்பதிகள் இருவரும், ராஜேஸ்வரியின் பெரியப்பாவான கண்ணனின் வீட்டிற்கு வந்துள்ளனர். இதை எப்படியோ அறிந்து கொண்ட ராஜேஸ்வரியின் தந்தை கர்ணன், ராஜேஸ்வரி தன்னுடைய காதலனோடு சென்றதற்கு அண்ணி சாந்தி தான் காரணம் என்று, மிகுந்த கோபத்தோடு அங்கு வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக, சாந்தியின் மீது, கடும் கோபம் கொண்டு, கர்ணன் வாக்குவாதம் செய்துள்ளார். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த காரணம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தன்னுடைய அண்ணியான சாந்தியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். அதன் பிறகு, கர்ணன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த நபர்கள், உடனடியாக சாந்தியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனாலும், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கர்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

பழைய ஓய்வூதிய திட்டம்..!! இது ஆபத்தான செயல்..!! மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!!

Tue Sep 19 , 2023
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நாடு முழுவதும் பல வித சர்ச்சைகளும் போராட்டங்களும் நடந்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பல நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, பல மாநில அரசுகள் ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலில் கொண்டு வந்துள்ளன. அந்த மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கு ஒரு எச்சரிக்கையை […]

You May Like