விசித்ராவுடன் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டில் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ச்சை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் பிரதீப். அந்த வகையில், நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் பெண் போட்டியாளர்கள் தோற்றால், அவர்களின் மேக்கப் பொருட்களை பிக்பாஸிடம் கொடுத்துவிட வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு பிரதீப் சொன்ன கமெண்ட் சர்ச்சையை கிளப்பியது. மேக்கப்பை கலைத்தால் தான் பெண்களின் உண்மை முகம் வெளியவரும், அதனை பார்க்க விரும்புவதாக கூறியிருந்தார்.
இதுமட்டுமல்லாது ஆணும், பெண்ணும் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என்று பிக்பாஸ் தண்டனை கொடுக்க வேண்டும் என பிரதீப் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விசித்ரா பிக்பாஸிடம், ’இவர் மட்டும் தைரியமா என்கூட படுத்து தூங்கிட்டா, என் பெயரை மாத்திக்கிறேன்’ எனக் கோபமாக பேசியுள்ளார்.
உடனே பிரதீப், ’நான் பெட்ல படுத்து தூங்கனும்னு சொல்லல, உங்க பக்கத்துல படுத்து தூங்கனும்னு தான் சொன்னேன்’ எனக் கூறினார். பிரதீப்பின் இந்தப் பேச்சுக்கு ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததோடு இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவை காண: https://x.com/U_Views_Off/status/1709950384033128647?s=20