பிக்பாஸ் 7 நிகழ்ச்சி எதிர்பாராத பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 40 நாட்களுக்கு பின்னர் போட வேண்டிய சண்டைகளை, வீட்டிற்குள் வந்த இரண்டே நாட்களில் போட்டுக் கொண்டனர் இந்த சீசன் போட்டியாளர்கள். நேற்றைய தினம், போட்டியாளர்கள் முன் முதல் முறையாக தோன்றிய கமல், ஜோவிகா மற்றும் விசித்ரா இடையேயான படிப்பு குறித்த பிரச்சனையை, மிகவும் சாமர்த்தியமாக பட்டும் படமால், டீல் செய்தார்.
அதே போல், பவா செல்லதுரை கூறிய, வேலைக்கார பெண் இடுப்பை கிள்ளியை கதை, பல போட்டியாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கமல்ஹாசன் தன்னிலை விளக்கம் கொடுத்தது அற்புதம். இதைத் தொடர்ந்து இன்றைய தினம், வன்முறையோடு வார்த்தைகளை விட்ட, முதல் கேப்டனான விஜய் வர்மாவை தான் வெளுத்து வாங்கியுள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரதீப் எடுத்துச் சென்ற ஷூ தன் மீது பட்டு விட்டதாகவும் இதுபோல் நடந்தால் திடீர் என தனக்கு கோவம் வந்துவிடும் என கூறி, தன்னுடைய முழங்கையை மடக்கி மூஞ்சை உடைத்து விடுவேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு பவா, விஷ்ணு போன்ற பலர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் அதுவே ஒரு பிரச்சனையாக மாறியது.
இந்த பிரச்சனையை இன்று விசாரிக்கும் கமல்ஹாசன், விஜய் வர்மா கூறிய விஷயத்தை அச்சு பிறழாமல் செய்து காட்டினார். இதனை விஜய் வர்மா மறுக்க வர, குறும்படம் போட்டு காட்டுவேன் என எச்சரித்த கமல், பின்னர் அவரின் வன்முறை பேச்சை கண்டித்தது மட்டும் இன்றி, STRIKE என்று எழுதப்பட்ட மஞ்சள் நிற கார்டு ஒன்றை காட்டி, என்னிடம் இருந்து மூன்று முறை இதனை பெற்றால் நான் நிற்கும் இந்த இடத்திற்கு வந்து என்னிடம் பேசி விட்டு ஜாலியா வீட்டுக்கு போகலாம் என கூறுகிறார். இந்த வீடியோ மற்ற போட்டியாளர்களுக்கு பயம்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.