சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகலூர் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான சின்னதுரை. பைக் மெக்கானிக் வேலை செய்து வரும் இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவத்தில் இருந்த சின்னதுரை, தனது 2 வயது மகனை பைக்கில் வைத்துக்கொண்டு, 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னசேலம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது குழந்தையை விஜயபுரம் வேதவள்ளி மாரியம்மன் கோயில் பகுதியில் தனியாக விட்டு சென்றுள்ளார்.
இதனால் குழந்தை அழுதுள்ளது. இதனை பார்த்த அதே தெருவில் வசிக்கும் 10 வயதான கோகுல் என்ற சிறுவன் தன் அரவணைப்பில் குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். இதுகுறித்து, சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து, பாலமுருகன் சம்பவ இடத்துக்கு சென்று தனது குழந்தையை தூக்கியுள்ளார். அனால் அந்த குழந்தை, தன்னை வைத்திருந்த கோகுலை பிரிய மனமில்லாமல் அழுதது. இதையடுத்து கோகுலுடன் சேர்த்து அந்த குழந்தையை அழைத்து சென்றனர்.
இந்நிலையில் போலீசார், குழந்தையை விட்டு சென்றது யார் என்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் சின்னதுரையின் மனைவியும் தனது குழந்தையை காணவில்லை என்று கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் குழந்தையை தேடுவதை கண்ட போலீசார், அவர்கலுக்கு அறிவுரை கூறி, பின் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் போலீசார், குழந்தையை பாதுகாத்து வைத்திருந்த கோகுலுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.