fbpx

காசா பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகளை, வேட்டையாடிய இஸ்ரேல் காவல்துறையினர்….!

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது பாலஸ்தீன புரட்சி அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் ஹமாஸ் அமைப்பினர், திடீரென்று வான்வழி தாக்குதல் நடத்தினர் வான்வழி தாக்குதல் மட்டுமல்லாமல், பல அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பின் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு, இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஒருபுறம் கடுமையான போர் நடந்து வருகின்ற நிலையில், இஸ்ரேல் நாட்டு காவல்துறையினரும் தங்களுடைய வேட்டையை தொடங்கியுள்ளனர். அதாவது, காசா பகுதியில் ஊடுருவிய சில பயங்கரவாதிகளை இஸ்ரேல் நாட்டு காவல் துறையினர், சேஸ் செய்து சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே, காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக, ஒட்டுமொத்த காசா நகரமும் ஊருக்குலைந்துள்ளது. பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன. ஒட்டுமொத்த காசா நகரமும் மயானத்தை போல காட்சி தருகின்ற நிலையில், இஸ்ரேல் நாட்டின் காவல்துறை நடத்திய இந்த அதிரடி துப்பாக்கிச் சூடு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

 அட இவ்வளவு தானே, விடுங்க நா பாத்துக்குறேன்.....!ஆளுங்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு  நச் பதில் அளித்த சேகர்பாபு....! 

Wed Oct 11 , 2023
தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் காவிரி விவகாரத்தில், உடனடியாக மத்திய அரசும், கர்நாடக அரசும் நல்ல முடிவை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது நாள் சட்டசபையில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாள் கூட்டம் தொடங்கியவுடன் கேள்வி நேரத்தின்போது பழனி சட்டசபை உறுப்பினர் செந்தில்குமார் தமிழக அறநிலையத்துறை அமைச்சருக்கு ஒரு கோரிக்கை […]

You May Like