fbpx

“இந்த விஷயம் தெரியாம, இனிமேல் ஃப்ரிட்ஜில் உணவை வைக்காதீங்க”.!

இன்றைய காலகட்டங்களில் ரெஃப்ரிஜிரேட்டர்கள் அனைத்து வீடுகளிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் ஆகிவிட்டது. நாம் சமைத்த உணவுகள் எஞ்சி இருக்கும் போது அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் பயன்படுத்துகிறோம். அவ்வாறு அதனை எடுத்து மீண்டும் பயன்படுத்தும் போது நன்றாக சூடவைத்து பயன்படுத்துகிறோம். இவ்வாறு உணவை மீண்டும் சுட வைத்து பயன்படுத்துவதால் நமது உடலுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமா என பார்ப்போம்.

நாம் சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் போது அந்த உணவு 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுகாக்கப்படுகிறது. இதன் காரணமாக உணவில் கிருமிகள் வளர்வது தடுக்கப்படுகிறது. மேலும் சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் போது நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு கேட்டுப் போகாமல் இருக்கும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை மட்டும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மேல் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.

ஒரு உணவை நாம் சேமித்து வைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது பாக்டீரியாக்கள் அதில் கலந்து நமக்கு உபாதைகள் ஏற்படுத்தலாம். மேலும் ஒரே உணவை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி பயன்படுத்தும் போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறையும். ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும் உணவை பயன்படுத்துவது நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே உணவை அதிக முறை சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

ஒரு உணவை சமைத்த பின் நீண்ட நேரம் வெளியில் வைத்துவிட்டு பின்னர் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. ஏனெனில் ஒரு உணவானது 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் இருக்கும் போது அது அறையின் வெப்பநிலைக்கு மாறிவிடும். எனவே ஒரு உணவு சமைத்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் அதனை பிரிட்ஜில் வைத்து விட வேண்டும்.

Kathir

Next Post

75 வயது முதியவரை கடித்த பாம்பு... சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் செய்த செயல்...!

Sun Nov 19 , 2023
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சியில் ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மூன்று மலை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமங்களுக்கு போதிய சாலை வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டும். அலகட்டு கிராமத்தை சேர்ந்த […]

You May Like