fbpx

அதிகரிக்கும் இளம் வயது இதயநோய்.! பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

இந்தியாவில் இளம் வயது மரணங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாரடைப்பிற்கு பலியாகும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவின் இறப்பு விகிதத்தில் இதய நோய் 26.66% அதிகரித்து இருக்கிறது. மேலும் இளைஞர்களிடையே இதய நோய் 300 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இந்த இதய நோயின் அபாயம் மிகப்பெரிய சமுதாய சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தும் இன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மக்களிடம் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்களும் உடல் இயக்கம் இல்லாமையும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மன அழுத்தம் மற்றும் மரபணு ஆகியவையும் இந்த இதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

கணினிக்கு முன் அதிக நேரம் அமர்ந்து வேலை பார்ப்பது புகைப்பிடித்தல் மது அருந்துதல் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புகள் கொண்ட துரித உணவுகளை உட்கொள்ளுதல் சரியாக தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவை இந்த இதய நோய்களுக்கான முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. இந்த நோய்களிலிருந்து விடுபட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களை சிறந்த மருந்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற இளம் வயதில் ஏற்படும் இதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேலும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதோடு எளிய உடற்பயிற்சிகளையும் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும். வரபனு சார்ந்த இதய நோய்களை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை கையாள்வதற்கு முறையான கவுன்சிலிங் பயிற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இது போன்ற வாழ்க்கை முறையை பின்பற்றும்போது இதய நோய் போன்ற சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Post

கண் திருஷ்டியால் ஏற்பட்ட தோஷம் நீங்க… இந்த பரிகாரம் ஒன்றே போதும்.!

Thu Nov 23 , 2023
மக்களாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒன்றாக உழைத்து பணம் சம்பாதித்து உடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதையே விரும்புவோம். சிலருக்கு என்னதான் வாழ்வில் கஷ்டப்பட்டு உழைத்து பொருள் சேர்த்தாலும் அவர்கள் சேர்த்த செல்வம் எதுவும் வீட்டில் தாங்காது. அதற்கு மற்றவர்களின் கண் திருஷ்டி காரணமாக இருக்கும். சொல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று சொல்வார்கள் ஏனெனில் கண் திருஷ்டி அவ்வளவு தீமைகள் கொண்டது. என்னதான் நம்மை சுற்றி நல்லவர்கள் இருந்தாலும் கெட்டவர்களும் இருக்கத்தான் […]

You May Like