fbpx

டிசம்பர் 4ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!! மாணவர்கள் குஷி..!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான, நாகர்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியார் பேராலயத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் நாளான டிச.1ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட அருள் பணியாளர்கள் தலைமை வகித்து ஆடம்பரக் கூட்டு திருப்பலி நிறைவேற்றுகின்றனர்.

கோட்டாறு பங்கு அருள்பணிப் பேரவையினர் சிறப்பிக்கின்றனர். டிசம்பர் 2ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கும், டிச.3ஆம் தேதி இரவு 10 மணிக்கும் சவேரியாரின் தேர்பவனி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நிறைவு நாளான டிச.4ஆம் தேதி காலையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். 8 மணிக்கு மலையாளத் திருப்பலி நடைபெறவுள்ளது.. இதில், திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட ஆயர் கிளாடின்அலெக்ஸ் தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். இதனால், டிசம்பர் 4ஆம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

’என் தொடையை யாராவது தொட்டால் அவனுடையதை நான் பிடிப்பேன்’..!! ரேகா நாயர் பளீச் பதில்..!!

Tue Nov 28 , 2023
பிரபல சர்ச்சைக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர், தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்தார். பின்னர், சன்டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி ஆவார். சித்ராவின் தற்கொலை ரகசியங்கள் குறித்து பல யூடியூப் சேனல்களில் பேட்டி […]

You May Like