fbpx

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச.4) தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளையும் (டிச.5) பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

ஊழியர்களுக்கு ’Work From Home’..!! தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

Mon Dec 4 , 2023
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது, சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் அத்தியாவசியப் […]

You May Like