சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் நிறுவனத்தில் வாயு கசிவு ஏற்பட்டதால் சின்ன குப்பம் பெரிய குப்பத்தில் உள்ள மக்கள் அனைவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு அப்பகுதிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறலுடன் மயக்கம் அடைந்தனர். ரசாயன வாயு கசிவால், அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நள்ளிரவில் திடீரென இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால், பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் வேறு இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.
சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் அதிக அளவில் வெளியேறுவதால் அவர்களை தங்க வைக்க மண்டபங்களை தயார் செய்துள்ளோம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அதே போல, பேருந்து மூலம் மீட்கப்பட்டு வரும் மக்களை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் அவர்களுக்கு சொந்தமான ஹோட்டலில் தங்க வைக்கப்படுகின்றனர். மனிதாபிமான அடிப்படையில் அவரது மகன் கே.கார்த்திக் MC ஹோட்டலை திறந்து மக்களுக்கு உதவி வருகிறார்.