சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
குஜராத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருடன் சினிமாவில் வாய்ப்பு தேடி தயாரிப்பாளரை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார். இந்தப் பெண்ணிற்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறிய தயாரிப்பாளர் அதனை பயன்படுத்தி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச்சென்ற சிறுமியின் உறவினர் மற்றும் சிறுமி இருவரும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குஜராத்தை சார்ந்த தயாரிப்பாளரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியிடம் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தது நிரூபணமானது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.