fbpx

ஆவின், மின்சார வாரிய காலிப்பணியிடங்கள்..!! இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு..!! வெளியான அறிவிப்பு..!!

ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான காலிப் பணியிடங்கள் முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கேற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-2-ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த 20ஆம் தேதி வெளியிட்டது. அந்த அட்டவணையில், 18 வகையான பணிகளில் 3,772 காலியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தேர்வு அட்டவணையில் ஆவின், மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உதவியாளர் பதவி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் உதவியாளர் (கிரேடு-3) பதவி ஆகியவை குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ தேர்வின் கீழும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தில் இளநிலை உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஆபீஸ்),ஜூனியர் எக்சிகியூட்டிவ் (தட்டச்சு) உள்ளிட்ட பதவிகள் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் (லேப்) போன்ற பதவிகள் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வின்கீழும், மாநில போக்குவரத்துக் கழகத்தில் உதவிமேலாளர் (சட்டம்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் மேலாளர் (கிரேடு 3) – சட்டம் மற்றும் முதுநிலை அலுவலர் (சட்டம்) ஆகிய பணிகள் ஒருங்கிணைந்த சட்ட பணிகள் தேர்வின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் அந்தந்த நிறுவனங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அட பாவமே.! கள்ளக்காதலனை வீட்டில் குடி வைத்து கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி.! கொடூர முடிவு.!

Fri Dec 29 , 2023
உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் கள்ளக்காதல் காரணமாக கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்திலுள்ள பஹரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவம் குப்தா26). பைக் டாக்சி டிரைவராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும் இரண்டு வயதில் குழந்தையும் […]

You May Like