உங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை, தியேட்டரில் அமர்ந்து ரசித்த நீங்கள் அதனை வீட்டில் இருந்தபடி மீண்டும் பார்க்க, ஓடிடி(OTT) தளத்தில் இந்த பிப்ரவரியில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ! ஆக்சன், காதல், காமெடி என்று பல பிரிவுகளிலும் படங்கள் வெளியாக உள்ளன.
மெரி கிறிஸ்மஸ் – இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியும், பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப்பும் இணைந்து நடித்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸில் தற்போது வெளியாக உள்ள இந்தப் படம், விஜய் சேதுபதி முதல் பாலிவுட் அறிமுகத்தை கொடுத்துள்ளது. காதல் ததும்பும் இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
அயலான் – கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிப்பில், R.ரவிக்குமார் இயக்கிய அயலான் திரைப்படத்தின் கதை, ஒரு வேற்று கிரகவாசியுடன் சேர்ந்து பூமியை காப்பாற்றும் ஹீரோவின் சாகசங்களை பற்றியது. இதில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இது அறிவியல் புனைக்கதை திரைப்படம் என்றாலும், இதற்கு உயிரூட்ட ஹாலிவுட் படங்களுக்கு இணையான பல புதிய தொழில்நுட்பங்களை கையாண்டுள்ளனர். 5 ஆண்டுகள் உழைத்து, உருவாக்கிய இந்த படம் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தையும் விரைவில் நீங்கள் ஓடிடி தளத்தில் காணலாம்.
மிஷன்: (சாப்டர் 1) – லைக்கா ப்ரோடக்ஷன் தயாரித்து, ஏ.எல்.விஜய் இயக்கிய இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாகவும், எமி ஜாக்சனும் அவருக்கு ஜோடியாகவும் இணைந்து நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லராக வெளிவந்து, ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்ற இந்தப் படம், இந்த மாதம் இறுதிக்குள் ஓடிடியில் வெளியாகும்.
கேப்டன் மில்லர்: தனுஷின் மாறுபட்ட வேடத்தில், ஒரு புதிய கதையுடன் உருவாகிய இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். நடிகர் தனுஷுடன், சிவ ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன் போன்ற பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த படம் பிப்ரவரியின் பிற்பகுதியில் ஓடிடியில் வெளியாகும்.