திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். தென்காசி அருகே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி இல்லத்திலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு நிதி வாங்கியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுகிறது.
கோவையில் 2 இடங்கள் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடக்கிறது. திருச்சியில் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, சென்னை, சிவகங்கை, தென்காசி ஆகிய இடங்களிலும் சோதனையானது நடக்கிறது.