fbpx

150 வருடங்களாக கோயிலை பாதுகாக்கும் தெய்வீக முதலை.! இந்த கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?

கேரளாவில் அனந்தபுரா என்ற பகுதியில் அமைந்துள்ளது ஆனந்த பத்மநாதசுவாமி திருக்கோயில். இந்தியாவில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த கோயிலுக்கு சிறப்பான விஷயமாக கருதப்படுவது 150 வருடங்களாக முதலை இந்த கோயிலை பாதுகாத்து வருவது தான்.

9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த கோவிலை சுற்றியும் தலைவாயிலும், பச்சை பசேலென காட்சியும் அமைந்திருப்பது மனதுக்கு பிரமிப்பாக இருக்கிறது. இந்த அமைதியான சூழ்நிலையே இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதியையும், நிம்மதியையும் தருகிறது.

மேலும் இந்த கோயிலில் வற்றாத குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் 150 ஆண்டுகளாக ஒரு முதலை வாழ்ந்து வருகிறது. முதலைகள் அசைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருபவை என்றே நாம் அறிந்து வருகிறோம். ஆனால் இந்த முதலை கோயிலில் படைக்கப்படும் பிரசாதத்தை மட்டுமே உணவாக உண்டு வாழ்ந்து வருகிறது.

இந்த முதலைக்கு முன்னதாக ஒரு முதலை கோயில் குளத்தில் இருந்துள்ளது. அந்த முதலை இறந்ததும் அடுத்ததாக ஒரு முதலை வந்து கோயிலை பாதுகாத்து வருகிறது. கோயில் குளத்தை சுற்றிலும் எந்த நீர்நிலைகளும் இல்லாத பட்சத்தில் இந்த முதலைகள் எப்படி இங்கே வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. கோயில் குளத்தில் குளிக்கும் பக்தர்களையும், அங்கு வாழ்ந்து வரும் மக்களையும் இந்த முதலை எதுவும் செய்வதில்லை என்பது அதிசயமாக கருதப்பட்டு வருகிறது.

Rupa

Next Post

திமுக - பாஜக கூட்டணியா?... இருதுருவங்களாக உள்ளோம்!… கதவு திறந்தே உள்ளது!… அண்ணாமலை மாஸ்டர் பிளான்!

Thu Feb 8 , 2024
வரும் மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி வியூகம் அமைப்பதில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய முக்கிய கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பாஜக தனது கட்சியின் பலத்தை வலுப்படுத்தும் வகையில் மாற்றுக்கட்சிகளில் இருந்து வரும் தலைவர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 15 முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் ஒரு முன்னாள் எம்.பி., பாஜகவில் இணையும் […]

You May Like