திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருச்சி அருகே உள்ள திருப்பைஞ்சீலி கிராமத்தில் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(70). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது பேரனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்கு வந்தவர்களுடன் அமர்ந்து ராமச்சந்திரன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த மர்ம கும்ப கும்பல் பேசிக் கொண்டிருந்த விஜயா ராஜேந்திரன் ராமச்சந்திரன் மற்றும் நடராஜன் ஆகிய நான்கு பேரையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இவர்களது அலறல் சுத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு மண்ணச்சநல்லூர் மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர் மற்றும் மண்ணச்சநல்லூர் காவல்துறை ஆய்வாளர் ரகுராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டில் நான்கு பேர் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.