fbpx

தினமும் இரவில் இதை ட்ரை பண்ணி பாருங்க.! மேஜிக் போல தொப்பை காணாமல் போகும்.!

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடை என்பது பலருக்கும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக உடல் எடையை குறைத்தாலும் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று பலரும் புலம்பி வருகின்றனர். இதற்கு முறையான உடற்பயிற்சி இல்லாததும், சரியான உணவு பழக்கங்கள் இல்லாமல் இருப்பதுமே பெரும் காரணமாக இருக்கிறது.

மேலும் இந்த தொப்பை கொழுப்பை குறைக்க உணவு முறைகளிலும், அன்றாட வாழ்க்கை முறைகளிலும் ஒரு சில செயல்களை செய்ய வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கீழே குறிப்பிட்ட செயல்முறைகளை செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பை எளிதாக குறைக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

1. இரவு நேரத்தில் மிகவும் எளிதாக ஜீரணமாக கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குறிப்பாக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது. இது ஜீரணமாக நம் உடல் சிரமப்படும். இதனால் உணவில் உள்ள கொழுப்பு உடலிலேயே தங்கி விடும்.

2. இரவு உணவை தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உண்ண வேண்டும். மிகவும் தாமதமாக உண்ணும் போது ஜீரணமாகாமல் உணவு வயிற்றிலேயே தங்கி விடுகிறது.

3. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு உணவு உண்ணும் போது வயிறு முக்கால்வாசி அளவு நிறையும்படியே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். முழுவதுமாக சாப்பிட்டுவிட்டு தூங்கக் கூடாது.

4. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக காபி, டீ போன்றவற்றை கட்டாயமாக குடிக்க கூடாது. இதற்கு பதில் க்ரீன் டீ அல்லது புதினா டீயை குடிப்பதன் மூலம் சாப்பிட்ட உணவும் எளிதாக ஜீரணம் ஆகும், தூக்கமும் நன்றாக வரும். இது போன்ற செயல்முறைகளை தினமும் வாழ்வில் பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைப்பதோடு தொப்பையில் உள்ள கொழுப்பும் மேஜிக் போல் கரையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

"இந்தியாவின் பெருமை.." அபுதாபியில் முதல் கோவில்.! பிரம்மாண்ட திறப்பு விழா.! கட்டிடக்கலை மற்றும் சிறப்பம்சங்கள்..!!

Wed Feb 14 , 2024
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கட்டப்பட்ட பிஏபிஎஸ் கோவிலை பிரம்மாண்டமான விழாவில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கோவிலின் கல்லில் சுத்தியல் மற்றும் உளி கொண்டு “வசுதைவ குடும்பகம்”(உலகம் ஒரு குடும்பம்) என்ற வாசகத்தை தன் கைப்பட செதுக்கினார். கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு குழந்தைகள் மற்றும் கோவிலின் சிற்பக் கலைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாடி மகிழ்ந்தார். இந்த நிகழ்வின் போது அபுதாபியின் முதல் இந்து […]

You May Like