fbpx

Brinjal | விஷமாகும் கத்தரிக்காய்.! இந்த நோய் இருப்பவர்கள் மறந்தும் கூட சாப்பிடாதீங்க.!

brinjal

Brinjal | பொதுவாக நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காய்கறிகளை அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம். காய்கறிகளில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் சிறுவயதில் இருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். குறிப்பாக கத்திரிக்காயில் நம் உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு சில நோயுள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு விஷமாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதைக் குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

இந்திய சமையலில் முக்கியமான இடத்தை பிடித்து வருகிறது கத்தரிக்காய். அந்த அளவிற்கு நம் உணவுகளில் அடிக்கடி சேர்த்து சமைத்து வருகிறோம். இதில் போக்ட்டோ நியூட்ரியெண்ட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் புற்று நோயை ஏற்படுத்தும் செல்களை முற்றிலுமாக அளிக்கிறது என்று வல்லுநர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். கத்திரிக்காயின் ஊட்டச்சத்து நம் உடலில் முழுமையாக கிடைக்க வாரத்திற்கு இரண்டு நாட்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் எலும்பு பலவீனம் பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இதில் உள்ள ஆக்சலேட் என்ற வேதிப்பொருள் எலும்புகளில் உள்ள கால்சியத்தை உறிஞ்சுகிறது. இதனால் எலும்புகள் அதிக அளவு பலவீனமாகிவிடும். மூட்டு வலி மற்றும் மூட்டு தேய்மானம் பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை சாப்பிடும் போது இது வலியை அதிகப்படுத்தி அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

சிறுநீரக கற்கள் உருவாகும் பாதிப்பு உள்ளவர்கள் கத்திரிக்காயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இது மேலும் சிறுநீரக கற்களை உருவாக்கும். மூலநோய் பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. மேலும் சொரியாசிஸ், உடலில் அரிப்பு, தோல் வியாதிகள் இருப்பவர்கள் கத்திரிக்காயை சாப்பிடுவதன் மூலம் இது அரிப்பை அதிகப்படுத்துகிறது. மேலே குறிப்பிட்ட நோய் பாதிப்புடையவர்கள் கத்திரிக்காயை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

English Summary: Brinjal| People with certain diseases should not eat eggplant. Doctors are warning that it will turn out to be poison for them.

Read More: மக்களே உஷார்.! பல் துலக்காமல் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் தெரியுமா.!?

Rupa

Next Post

cVIGIL| தேர்தல் முறைகேடுகளுக்கு '100' நிமிடங்களில் நடவடிக்கை.! தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி.!

Sat Feb 24 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நடைமுறை இருக்கும் தேதியை மற்றும் அட்டவணை மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்டு இருந்த செய்தியில் மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு பொது தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் அட்டவணை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தது. இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாட்டில் […]

You May Like