ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவித்து, 5 ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.
சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் நயீம் அகமது கான் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது உத்தரவில்; ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவித்து, 5 ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி “நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறது” என்று மத்திய அரசாங்கம் கூறியது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டுவதற்கும், யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளுக்கு தளவாட ஆதரவை வழங்குவதற்கும், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆதரிப்பதில் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
எனவே, ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவித்து, 5 ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.