மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சருமான முக.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூறுகையில், இது திமுகவின் தேர்தல் அறிக்கை அல்ல, மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவுக்கு எனது பாராட்டுகள். இந்தியாவை பாழ்படுத்தி விட்டது பாஜக அரசு” என்று தெரிவித்தார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை
* மாநிலங்கள் அனைத்தும் என்ற வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்
* உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும்
* புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
* ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
* ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
* ஒன்றிய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
* அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
* திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
* தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
* ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
* புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்
* நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
* நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர்உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும்.
* தமிழ்நாட்டிற்கு ‘ நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
* மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
* தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
* வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
* குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
* ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
* ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
* சிலிண்டர் விலை ரூ.500 , பெட்ரோல் 75, டீசல் 65 ரூபாய்களாக குறைக்கப்படும்