நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்தான புதிய அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், ”தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை முடியும் ஜூன் 4ஆம் தேதி வரை தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
அதாவது உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 50,000 வரை எடுத்துச் செல்ல ஜூன் 4ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணம் இன்றி பணம் வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : செம குட் நியூஸ்..!! TNPSC குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு..!! உடனே செக் பண்ணுங்க..!!