சினிமாவில் சில நடிகர்களின் வாழ்க்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் இருப்பதுண்டு. இந்திய சினிமாவில் பல நடிகர்களின் மரணம் இன்னமும் அவிழ்க்க முடியாத மர்மமாகவே இருக்கிறது. அப்படியான ஒரு நடிகைதான் நிஷா நூர். இவரது கடைசி காலமும், மரணமும் இன்றும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது.
பட வாய்ப்பு இல்லாமல் சிலர் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் தவறான பாதைக்கும் செல்வதுண்டு. அப்படி ஒரு நடிகை தான் நிஷா நூர். டிக் டிக் டிக், இனிமை இதோ இதோ, ஸ்ரீ ராகவேந்திரா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நிஷா நூர். தமிழில் பாலசந்தர், விசு உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் சில மலையாள படங்களிலும் நிஷா நூர் நடித்திருக்கிறார். ஆனால், தொடர்ந்து பட வாய்ப்பில்லாத காரணத்தால் வருமானத்துக்கு வழியில்லாமல் இருந்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு தர்காவின் ஒன்றின் வெளிப்புறம் உடல் எலும்புகள் தெரிய மிக மோசமான நிலையில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இறுதியாக கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.
Read More : ஷாக்கிங் நியூஸ்..!! தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்புகளுக்கான கட்டணம் உயருகிறது..?