fbpx

’இனி 5 சர்வீஸ் இருந்தாலும் ஒன்றுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம்’..!! தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி..!!

தமிழ்நாட்டில் வீடுகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதில் குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல நெசவாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர முதல் 100 யூனிட் மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஒரே முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை கணினி வழியாக மெர்ஜிங் செய்ய மின்வாரியம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒரு வீட்டில் 5 சர்வீஸ் லைன் இருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், அதை மெர்ஜிங் செய்வதால், 5 இணைப்பு இருந்தாலும், அதில் ஒன்றுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த முடிவுக்கு மின்வாரிய ஊழியர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

Read More : ’இனி கரண்ட் பில் பிரச்சனையே வராது’..!! ரூ.75,000 மானியம்..!! மின்சாரத்தை விற்றும் லாபம் பார்க்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Chella

Next Post

வானில் நிகழும் அதிசயம்..!! ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள்..!! எப்போது பார்க்க முடியும்..? விஞ்ஞானிகள் தகவல்..!!

Fri May 17 , 2024
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் நேர் கோட்டில் அமைவது என்பது மிகவும் அரிதான ஒன்று. அப்படியான சம்பவம் விரைவில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விண்வெளி நாம் நினைப்பதை விட பெரியது. நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது. மனிதர்கள் தோன்றிய காலம் தொடங்கி தற்போது வரை விண்வெளியை புரிந்து கொள்ள முயன்று வருகின்றனர். ஆனால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இன்னும் விண்வெளியை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. சோவியத் ரஷ்யா காலத்தில் விண்வெளிக்கு […]

You May Like