fbpx

’கஞ்சாவை இவர்களே வைத்துவிட்டு சவுக்கு சங்கரின் கையை உடைத்தது தவறு’..!! எச்.ராஜா கொந்தளிப்பு..!!

நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில் 380 தொகுதிகளில் 3-வது முறையாக பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது எனவும் இனி வரும் தொகுதிகள் பாஜகவுக்கு போனஸ் ஆக தான் இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வி பயத்தின் காரணமாகவே ரேபரலி தொகுதியில் போட்டியிடுகிறார். என்னை பற்றியே விமர்சனம் செய்தவர்தான் சவுக்கு சங்கர். அவர் செய்தது தவறாக இருந்தாலும் கஞ்சாவை வைத்து கைது செய்து அவரது கையை உடைத்தது காவல்துறையின் அராஜக செயலாக உள்ளது.

மருத்துவ பரிசோதனையில் அவரது கையில் 2 இடங்களில் எலும்பு முறிவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், பிரதமரை அவதூறாக பேசிய அமைச்சர்கள் தா மோ அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவினரின் வீடுகளில் இருந்துதான் ஜாபர் சாதிக் 2000 கோடி ருபாய் கஞ்சா கடத்தலுக்கு கொண்டு சென்றிருக்கிறார். முதல்வர் கஞ்சாவை ஒழிப்பது குறித்து காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்குவது வேடிக்கையாக உள்ளது. காவலர்களுக்கு பிடித்த கஞ்சாவை வெளியே தெரிவிக்காமல் இருப்பதற்காக ஆலோசனை வழங்குகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”பயணிகள் பேருந்துகளின் உள்ளேயும் குடையுடன் பிடித்து தான் பயணிக்கின்றனர். அரசுப் பேருந்துகளை பார்த்தாலே பயமாக உள்ளது. பேருந்தில் சக்கரங்கள் கலன்று காரின் மீது மோது விடுமோ என்று பயமாக உள்ளது. தமிழக அரசு நிர்வாகம் மோசமாக உள்ளது. விரைவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்றார்.

Read More : ’ரயிலில் இனி நிம்மதியா தூங்கலாம்’..!! ’திருட்டு பயம் கிடையாது’..!! புதிய வழிமுறைகளை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..!!

Chella

Next Post

4,000 ஆண்டுகள் கால மர்மம்!… கிசா பிரமிடுக்கு அடியில் மறைக்கப்பட்ட புதையல் கண்டுபிடிப்பு?

Sat May 18 , 2024
Giza Pyramid: கிசாவின் மேற்கு கல்லறையிக்கு அடியில் எல் என்ற எழுத்தை போன்ற மர்மமான அமைப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தில் உள்ள பிரமிடுகளில் மிகவும் பெரியது கிசா. மிகவும் பழமையான கட்டிடங்களில் ஒன்று. எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகில், நைல் நதிக்கு 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. கிசா பிரமிடுக்குள் குஃபு மன்னரின் கல்லறை இருக்கிறது. இங்கே கல்லறையுடன் ஏராளமான பொருள்களும் ஆபரணங்களும் வைக்கப்பட்டிருந்தன. குஃபு மன்னரின் மரணத்துக்குப் […]

You May Like