fbpx

அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்..!! பணியாளர்களே டைம் நோட் பண்ணிக்கோங்க..!! அரசாணை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ பணியாளர்களுக்கு 3 ஷிப்ட் முறையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியம் கடைநிலை ஊழியர்களுக்கு இதுவரை 2 ஷிப்ட் என்ற முறைகளிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் ( தரம் 2) மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பணியாளர்களில் 50% பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீதம் பேர் 2-வது ஷிப்டிலும், 25 சதவீத பேர் மூன்றாவது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : உயிரைப் பறிக்கும் ’Non Stick’ பாத்திரங்கள்..!! உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கிப் போடுங்க..!! எச்சரிக்கும் ICMR..!!

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!! இனி தாமதமே ஆகாது..!!

Sat May 18 , 2024
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்கள், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை தந்து வருகிறது. எனவே, ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு, ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கே நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே, பொருட்கள் வழங்கப்படும் என்றும், கைரேகை பதிவு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. […]

You May Like