fbpx

ஜூன் 4 தேர்தல் முடிவுகள்.! ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு…! தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு. பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தல் முன்னிட்டு இந்தாண்டு கூடுதலாக கிடைத்துள்ள விடுமுறை நாட்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர்.

வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறந்து அன்றைய தினமே 2024 – 25-ம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பள்ளிகள் திறக்கப்படும் அன்றைய தினமே 2024 – 25-ம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், மாவட்டம் தோறும் உள்ள குடோன்களுக்கு தலைமை ஆசிரியர்கள் நேரில் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தேவையான அளவு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் புத்தகங்கள் நனையாமல் பார்த்துக் கொள்ளவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: ’30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனைகள் செய்யனும்’ – நிபுணர்கள் விளக்கம்

Rupa

Next Post

மித்தாலி ராஜுக்கும் எனக்கும் திருமணம்?… வாழ்நாளில் மறக்க முடியாது!… ஷிகர் தவான் ஓபன் டாக்!

Sat May 25 , 2024
Dhawan – Mithali Raj: இந்தியா இதுவரை உருவாக்கிய சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான், ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாதது அனைவருக்கும் தெரிந்திருக்கும். பரஸ்பர சம்மதத்துடன் கடந்த ஆண்டு அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியிடமிருந்து விவாகரத்து பெற்றார். 2023 அக்டோபரில் 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது, கொடுமையை முதன்மைக் காரணம் எனக் கூறி, ஷிகர் தவானுக்கு டெல்லி குடும்ப நீதிமன்றம் […]

You May Like