fbpx

Tn Govt: வாகனம் மோதி ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.50,000…!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உயிரிழப்பு ஏற்பட்ட நபர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ,2,00,000/- ம், பலத்த காயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000/-ம் அரசு உத்திரவுப்படி வழங்கப்பட்ட உள்ளது.

கடந்த ஜனவரி 2024 முதல் ஏப்ரல் 2024 வரை நான்கு மாதங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட மொத்த விபத்துக்களில் சுமார் 50% இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளாகும். இது கடந்த வருடத்தை விட அதிகமாகும். 18 வயது நிரம்பாமல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கியது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உயிரிழப்பு ஏற்பட்ட நபர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ,2,00,000/- ம், பலத்த காயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000/-ம் அரசு உத்திரவுப்படி வழங்கப்பட்ட உள்ளது. விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோர்களுக்கு ரூ.25,000/- அபராதமும் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை புதிய வாகனச் சட்டத்தின்படி விதிக்கப்படும். மேலும் வாகனம் ஓட்டிய நபருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிழகமே...! கட்டாய கல்விக்கு விண்ணப்பித்த பெற்றோர்கள் கவனத்திற்கு...!

Tue May 28 , 2024
கட்டாயக் கல்வி திட்டம் 25% ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தங்கள் பதிவு செய்த பள்ளிகளில் இன்று நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு மாநிலம் முழுவதும் 7,283 தனியாா் பள்ளிகளில் சுமாா் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது […]

You May Like