Pragnananda: நார்வே சர்வதேச செஸ் போட்டியின் 7-வது சுற்று ஆட்டத்தில் தமிழக வீரரும் இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றுள்ளார்.
12-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவன்ஞரில் நடந்து வருகிறது. இதில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 10 சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை மகுடம் சூடுவார். ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் அலிரெஜாவை எதிர்கொண்டார்.
இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா கிளாசிக்கல் ஆட்டத்தில் டிரா கண்டார். இதைத்தொடர்ந்து நடந்த அர்மாகேட்டன் முறையில் 60-வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார். இதேபோல் 2-ம் நிலை வீரரான பேபியானா காருனா (அமெரிக்கா) அர்மாகேட்டன் முறையில் சக நாட்டு வீரர் ஹிகரு நகமுராவை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய 5 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 30-வது காய் நகர்த்தலில் நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்தார். இதைதொடர்ந்து நடைபெற்ற 7வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
ஆனால் இறுதியில் போட்டி டிரா ஆனது. பின்னர், ஆர்மகெடான் சுற்றில் மகத்தான வெற்றியை பதிவு செய்த பிரக்ஞானந்தா, 11 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார். 13 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சென் ஹிகரு முதலிடத்திலும், 12.5 புள்ளிகளுடன் ஹிகரு நகமுரா 2 வது இடத்திலும் நீடிக்கின்றனர். முன்னதாக, நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் டிங் டிரெலினை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: பரபரப்பில் நாடு!… வாக்கு எண்ணிக்கை எதிரொலி!… இன்று இதெல்லாம் இயங்காது!