கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 99-வது காவிரி ஒழுங்கற்று குழு ஆலோசனை கூட்டத்தில், கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தினசரி 1 டிஎம்சி தண்ணீர் வீதம் அடுத்த 30 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தது. ஆனால், அதனை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இதற்கிடையே, நேற்று முன்தினம் காவிரி விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காவிரியில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. அதனால், காவிரி ஒழுங்காற்று குழு கூறிய அளவுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து முடியாது என சித்தராமையா கூறினார். மேலும், கர்நாடக அணையில் இருந்து தினமும் 8000 கனஅடி தண்ணீர் தான் திறந்து விட முடியும் என தெரிவித்தார்.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசின் நிலைப்பாட்டிற்கு முதல்வர் முக.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி நீரை திறக்க மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாளை அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Read More : தங்கத்தின் எடை மற்றும் அளவை கவனமாக நோட் பண்ணுங்க..!! இதையெல்லாம் பரிசோதனை செய்யுங்க..!!