2025 டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியுடன் (AAP) எந்த கூட்டணியும் வைக்கப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில், சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 2025 அல்லது அதற்கு முன் நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், டெல்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் எனவும், தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி முடிவு செய்யும் என்று யாதவ் மேலும் கூறினார்.
2020 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது, அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வரானார். ஆனால் கடந்த மார்ச் மாதம் மதுபான கொள்கை முறையீடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யபட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தாதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து விலகினார். கடந்த செப்டம்பர் மாதம் அதிஷி முதல்வராக பாதேவியேற்றார். டெல்லி 2025 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றது.
Read More: போட்டியின்போது இளம் கிரிக்கெட் வீரர் மரணம்.. நேரலையில் பதிவான காட்சிகள்..!! – ரசிகர்கள் சோகம்