fbpx

நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சி..!! பிரபல இயக்குனர் பாலசந்திர குமார் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

பிரபல மலையாள நடிகை கடந்த 2017ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 84 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சுனில்குமார் என்கிற பல்சர் சுனி சேர்க்கப்பட்டுள்ளார். திலீப் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை வன்கொடுமை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய பென் டிரைவ், நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும் அவர் அதை பார்க்கும்போது, அருகில் தான் இருந்ததாகவும் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலசந்திர குமார் தெரிவித்திருந்தார். மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளை கொலை செய்யவும் திலீப், சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

எனவே, இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட்டு வந்தது. இயக்குநர் பாலசந்திரகுமாரும் இந்த வழக்கில் சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில், சிறுநீரகக் கோளாறு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலசந்திரகுமார் கேரள மாநிலம் செங்கணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More : BREAKING| விடிய விடிய சிறை!. விடுதலை ஆனார் நடிகர் அல்லு அர்ஜுன்!

English Summary

Director Balachandra Kumar, who was suffering from kidney failure and heart disease, passed away.

Chella

Next Post

8 நாட்களில் 2வது மரண தண்டனை!. சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மேற்கு வங்க நீதிமன்றம் அதிரடி!.

Sat Dec 14 , 2024
Death sentence: மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ஃப்ராக்காவ் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி 9 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீபனந்து ஹல்தர், சுபோஜித் ஹல்தர் ஆகிய இருவரை கைது செய்தனர். […]

You May Like