fbpx

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!! என்ன ஆச்சு..? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்.கே. அத்வானி தற்போது கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

97 வயதாகும் அவர், கடந்த 4 மாதங்களில் ஐந்தாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாவே அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் எல்கே அத்வானி. பாஜக வளர மிக முக்கிய காரணமாக இருந்த தலைவர்களில் அத்வானியும் முக்கியமானவர். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் ரத யாத்திரையை அத்வானி தான் தலைமையேற்ற நடத்தினார். அதுமட்டுமின்றி பாஜகவின் நீண்டகால தேசிய தலைவராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குறியவர். கடந்த 2002 – 2004ஆம் ஆண்டு வரை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது துணை பிரதமராக பதவி வகித்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

Read More : ”என் பொண்டாட்டி கூட”..!! ”என்கிட்ட ஆதாரம் இருக்கு”..!! சௌந்தர்யாவுக்கு பிஆர் வேலை..!! விஷ்ணுவை மிரட்டிய பிக்பாஸ் ரவீந்தர்..!!

English Summary

LK Advani has been admitted to Apollo Hospital in Delhi for treatment due to health problems.

Chella

Next Post

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைக்கடைக்கு படையெடுக்கும் மக்கள்..!!

Sat Dec 14 , 2024
In Chennai today (December 14), the price of gold jewelry fell by Rs. 720 to Rs. 57,120 per sovereign and Rs. 90 per gram to Rs. 7,140.

You May Like