தென்னந்தோப்பில் நரபலிக்கு தயாராக இருந்த 2 வயது குழந்தை..!! அழு குரலால் சிக்கிய மந்திரவாதி..!! திகில் சம்பவம்..!!

2 வயது குழந்தையை கடத்திச் சென்று நரபலி கொடுக்க முயன்ற மந்திரவாதியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அகிலா. இவர்களின் 2 வயது மகள் சஸ்விகா. இவர், மணலி பகுதியில் தனது தாத்தா வீட்டு முற்றத்தில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து, பதறிப்போன பெற்றோர், போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். மேலும், அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கலாமோ என்ற சந்தேகத்திலும் தேடப்பட்டது. தொடர்ந்து அருகில் உள்ள பகுதிகளிலும் போலீசார் வலைவீசி தேடினர். இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காரகொண்டான்விளை தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் குழந்தையின் அழு குரல் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை வைத்து முதியவர் ஒருவர் பூஜை செய்துகொண்டிருந்தார். அவரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டது.

தென்னந்தோப்பில் நரபலிக்கு தயாராக இருந்த 2 வயது குழந்தை..!! அழு குரலால் சிக்கிய மந்திரவாதி..!! திகில் சம்பவம்..!!

பின்னர், காவலர்கள் அவரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. குழந்தையை கடத்தியவர் ராசப்பன் (68) என்பதும், தனது வீட்டில் பூஜை அறை வைத்து மாந்திரீக தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், குழந்தை சஸ்விகாவை கடத்திச் சென்று நகைகளை பறித்துக்கொண்டு, நரபலி கொடுக்க திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரை கைது செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

விவசாயிகளே..!! ’இனி ஞாயிற்றுக் கிழமையும் இயங்கும்’..!! அமைச்சர் சக்கரபாணி அதிரடி உத்தரவு..!!

Mon Feb 6 , 2023
தமிழகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பாக மக்கள் பயனடையும் வகையில் புதுவிதமான அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. திருவாரூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 19% ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் […]
விவசாயிகளே..!! ’இனி ஞாயிற்றுக் கிழமையும் இயங்கும்’..!! அமைச்சர் சக்கரபாணி அதிரடி உத்தரவு..!!

You May Like