தமிழகமே அடுத்த பயங்கரம்…! 21 வயது இளம் பெண்ணை 4 பேர் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம்…!

காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே 21 வயது இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் செங்கல்பட்டில் உள்ள தனது தோழிகளை பார்த்துவிட்டு சைதாப்பேட்டையில் செல்ல செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காரில் சாலவாக்கம் பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு கடத்தி சென்ற 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தற்பொழுது இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Vignesh

Next Post

சந்தேகத்தை ஏற்படுத்திய வாணி ஜெயராம் மரணம்.. வெளியானது உடற்கூராய்வு அறிக்கை..

Sun Feb 5 , 2023
வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என உடற்கூராய்வில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.. அவரின் மரணத்திற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அவரின் மரணம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது, இடறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் போலீசார் தெரிவித்திருந்தனர்.. மேலும் வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு […]

You May Like