நாய்க்கு தாமதமாக சோறு வைத்ததால் கொலை…!அதிர்ச்சி சம்பவம்!

நாய்க்கு தாமதமாக சோறு வைத்த காரணத்தினால் உறவுக்கார பையனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மன்னேகோடே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் ஹர்ஷத் மற்றும் ஹக்கீம். இன்று காலை ஹக்கீமும் அவரது நண்பர்களும் ஹர்ஷத்தை மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களிடம் ஹர்ஷத் மாடியில் இருந்து விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவன் மரணமடைந்தான்.

இதையடுத்து காவல்துறைக்கு தகவல்அளிக்கப்பட்டது. காவல் துறையினர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டனர். இன்று காலை மயங்கிய நிலையில்அந்த இளைஞர் மருத்துவமனை அழைத்து வரப்பட்டார். அவரது மார்பு விலா எலும்புகள் உடைந்து உள்ளுக்குள்ளேயே ரத்தம் கசித்துள்ளது. மேலும் உடலில் காயங்கள் உள்ளன.

இந்த காயங்கள் தவறி விழுந்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பெல்ட் மற்றும் பயங்கர ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மருத்துவமனையில் யார் அனுமதித்தார்கள் குடும்பத்தின் விவரங்களை சேகரித்தனர்.

பின்னர் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஹக்கீம் முன்னுக்குப் பின் முரணமாக பதில் அளித்துள்ளார். இதனால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நாய்க்கு உணவு தாமதமாக வைத்ததாக தெரிகின்றது.இதனால், பெல்ட்டாலும் , ஆயுதத்தாலும் தாக்கியுள்ளார். மேலும் அவரது விலா எலும்புகள் உடையும் அளவிற்கு தாக்கியுள்ளார்.

இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஹக்கீம் ஹர்ஷத்தின் மிக நெருங்கிய உறவினர். தந்தை வழியில் சிற்றப்பா மகன் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

தமிழகத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி..!!

Sun Nov 6 , 2022
பருவமழையால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவையாறு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான, கல்லணை புதிய பாலம் வழியாக, போக்குவரத்து புதிய வழித்தடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர், திருவையாறு புறவழிச் சாலை திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை வழியாக திருச்சிக்கு போக்குவரத்து வழிதடங்களை திறந்து […]

You May Like