அடுத்த அதிரடி… ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு…! குழு அமைத்து பதிவாளர் புதிய உத்தரவு…!

நியாயவிலை கடைக் பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலிக்க குழு அமைத்து உத்தரவிடபட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரின் மாதாந்திர ஒதுக்கீட்டு ஆணையின்படி, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து எடுத்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்து வருகின்றன. நியாய விலைக் கடைகளின் மூலம் விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு அரசால் அனுமதிக்கப்படும்.

அதன்படி,, கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அமைந்துள்ளது. பொதுவாக இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அரசின் மானியத்தின் மூலமாக குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் இதனை பயன்படுத்த குடும்ப அட்டை அவசியமாகும்.

இந்நிலையில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான.., நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் பாலமுருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான,. நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு முரண்பாடுகள் ஏதும் இல்லாத தீர்வுகளை பரிசளித்து.., அது குறித்து பரிந்துரையினை வருகின்ற 31-ம் தேதிக்குள் பதிவாளருக்கு அனுப்பிட வேண்டும் என கூட்டுறவு துறையின் பதிவாளர் சண்முகசுந்தரம் தனது ஆணையில் தெரிவித்துள்ளார்.

Image

Also Read: நல்ல சான்ஸ்… TET தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு பயற்சி வழங்கப்படும்…! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு…!

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளே கவனம்... இன்று முதல் இதுவும் கட்டாயம் இருக்க வேண்டும்...! மீறினால் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்படும்...!

Thu Jul 7 , 2022
பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு காவல் துறையினர் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் […]

You May Like