புதுக்கோட்டையில் தனது 13 வயது மகளை காட்டிற்குள் வைத்து அவளது தந்தை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். கொலையில் உடந்தையான அவரது இரண்டாவது மனைவியும் இரு தினங்களுக்கு முன் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்க்கோட்டை அருகே நொடியூர் பகுதியை சேர்ந்தவர் கே. பன்னீர். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இந்திரா இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன். இரண்டாவது மனைவி மூக்காயிக்கு 2 மகள்கள். இவர்களுக்கு அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய ஒரு பூஜை செய்ய வேண்டும் என புதுக்கோட்டையை சேர்ந்த பெண் மந்திரவாதி சி.வசந்தி கூறியுள்ளார். இதனை செய்ய பன்னீர், மூக்காயி, அவரது உறவினர்கள் குமார் (32), வசந்தி, முருகாயி ஆகியோர் கடந்த மே 17 அன்று நொடியூரில் உள்ள ஒரு குள்ளத்தில் நள்ளிரவு பூஜை நடந்தியுள்ளனர்.

பின்பு வசந்தி கூறியதால், மறுநாள் அருகில் உள்ள யூக்கலிப்டஸ் காட்டில் பன்னீர், மூக்காயி மற்றும் குமார் சேர்ந்து பன்னீரின் முத்த மனைவியின் மகள் வித்யா (13)வை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளனர். வித்யா கூச்சல் போட்டதால் மூக்காயி மற்றும் குமார் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். பன்னீர் ஒன்றும் அறியாதது போல் மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாடியுள்ளார். அங்கு வித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வித்யாவின் தாயார் இந்திரா அளித்த புகாரின் பேரில் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி இரு தினங்களுக்கு முன் மர்மான முறையில் இறந்துள்ளார்.