“போதை ஏறி போச்சு.. புத்தி மாறி போச்சு….”! அதிகாலையில் நிர்வாண ‘வாக்’ சென்ற குடிமகனால் தேனியில் பரபரப்பு!

மது போதை தலைக்கேறியதால் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து மக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தேனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போதை தலைக்கேறி விட்டால்  கை கால் புரியாது என கேட்டிருப்போம். ஆனால் அது போன்ற ஒரு  நிகழ்வு தேனி பகுதியில் அரங்கேறி இருக்கிறது. போதை தலைக்கு எறியதால் ஆடைகள் இன்றி  சாலைகளில் சுற்றி திரிந்த ஒரு நபரால் தேனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்தப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகியுள்ளது.

தேனி மாவட்டம் சோலை தேவன் பட்டியைச் சார்ந்தவர் சங்கர் 40 வயதான இவர்  டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.  இந்நிலையில் சம்பவ தினத்தன்று அதிகாலை ஏழு மணிக்கு  மது அருந்திவிட்டு  ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக  பட்டப் பகலில் அப்பகுதியில் உள்ள சாலைகளில் வலம் வந்திருக்கிறார். இதனைக் கண்ட அச்சமடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து வைத்து வீரபாண்டி பகுதியில் உள்ள காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை  நிர்வாணமாக அலைந்து திரிந்த சங்கரை கைது செய்து  இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள இவரது நிர்வாண காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Baskar

Next Post

17 மாநிலத்தில் "மத்திய அரசு வேலை" - கைவரிசையை காட்டிய பலே மோசடி கும்பல்! வளைவிரித்துப் பிடித்த ஓடிஸா போலீஸ்!

Sat Feb 18 , 2023
ஒடிசா மாநிலத்தின் பொருளாதார குற்றப்பிரிவு 17 மாநிலங்களில் கைவரிசையை காட்டி வந்த இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு மோசடி கும்பலை கைது செய்துள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தரம்பால் சிங் பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் மத்திய அரசு வேலை வாய்ப்பு பணிகளைப் போலவே இணையதள பக்கங்களை உருவாக்கி அவற்றில் வேலை வாய்ப்புகளை பற்றிய விபரங்களை பகிர்ந்து அதன் மூலம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக […]

You May Like