‘GOAT’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்! – யார் அவர்?

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால், அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட வரும் திரைப்படம் Greatest Of All Time. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இம்மாதம் Goat படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். மேலும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால், நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “விஜய்யின் கோட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் இயக்கி நடிக்கும் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் நான் பிசியாக இருந்ததால் அந்த வாய்ப்பை நிராகரிக்கும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டுவிட்டது. வெங்கட் பிரபு என்னிடம் கேட்டபோது, இந்த வாய்ப்பை விட விரும்பவில்லை, ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை என்றேன்” எனக் கூறியுள்ளார்.

Next Post

முதுகு வலியா..? அப்போ கண்டிப்பா நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!

Wed Apr 3 , 2024
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் உடல் சார்ந்து அதிக பிரச்னைகளை கூறுவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் பலர் நீண்டநேரம் ஓரிடத்தில் அமர்ந்து பணியாற்றுகின்றனர். சிலர், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பயணப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது தவிர, உடல்பருமன், முதுமை, ஆகியவை காரணமாக முதுகுவலி ஏற்படுகிறது. அதிலும் ஒருகாலத்தில் முதுமையின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த முதுகுவலி, மூட்டு வலியெல்லாம் இப்போது பள்ளி குழந்தைகளுக்கே ஏற்படுவதையும் நாம் பார்க்கிறோம். இதற்கு […]

You May Like