பிறந்த நாளன்று பரிதாபமாக இறந்து போன இளம்பெண்!

கேரள மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் விபத்து காரணமாக அவரது பிறந்த நாளன்று மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு தல பாடி பகுதியைச் சார்ந்தவர் ஜெயசீலா இவருக்கும் ரஞ்சன் என்பவருக்கும் கடந்த ஓராண்டுகளுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. இந்நிலையில் அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று அவரது பிறந்த நாள், வழக்கம்போல் பணிக்குச் சென்ற அவர் பேக்கரி சென்று தனது பணிகளை மேற்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது கிரைண்டரில் மாவு அரைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜெயசீலா தவறுதலாக அவரது சுடிதாரின் துப்பட்டா கிரைண்டரில் சிக்கியதால் தடுமாறி விழுந்து அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு இருக்கிறது. இதனைப் பார்த்த அவருடைய சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெய்சீலா உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து காசர் கோடு போலீசார் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் அன்று மகிழ்ச்சியாக பணிக்கு சென்ற பெண் பிறந்தநாள் அன்று இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே இப்படி ஒரு கோர விபத்தில் அவர் பலியாகி இருப்பது அப்பகுதியில் இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதற்கு என்று பிரத்தியேகமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஏப்ரான் போன்ற ஆடைகளை இது போன்ற பணிகளில் போது பயன்படுத்துவதால் பெரும்பாலான விபத்துக்கள் தடுக்கப்படும் என தொழிற்சாலை பாதுகாப்பு துறைகள் தெரிவிக்கின்றன. ஆனால் குடிசை தொழில் போன்று பேக்கரி மற்றும் பிற தொழில் செய்து வருபவர்களும் அங்கு பணியாற்றுபவர்களும் பணியிடங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் பின்பற்றுவதில்லை என்பது வேதனையான விஷயமே!

Baskar

Next Post

அரியலூரில்பரபரப்பு: ஒதுங்க சென்ற மாணவி! ஒளிந்து வந்த இளைஞர்! போக்சோவில் கைது!

Tue Feb 14 , 2023
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தைச் சார்ந்தவர் செல்வராஜ். அந்தப் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் இயற்கைபாதைகளை கழிப்பதற்காக ஆள் அரவமில்லாத ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த செல்வராஜ் அப்பெண்ணிற்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்து இருக்கிறார். பின்னர் […]

You May Like