அமீரகத்தில் அஜ்மான் நகரில் வலை செய்யும் பேக்கரி ஊழியருக்கு லாட்டரியில் ரூ.24.6 கோடி விழுந்துள்ளது.

அமீரகத்தில் அஜ்மான் நகரில் கேரளா கோழிகோடு பகுதியை சேர்ந்த அசைன் முகமது பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆசிபா என மனைவியும் இரு பெண் பிள்ளைகளும் இருகின்றனர். அசைன் முகமது எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி வாங்குவது வழக்கம். இதுவரை அடித்திடாத அதிஷ்டம் ஒரு முறை அவர் தனியாக ஆன்லைனில் வாங்கும் போது அடித்துள்ளது. அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.24.6 கோடி ரூபாய் விழுந்துள்ளதாக போன் வந்துள்ளது. தனது நண்பர்கள் தான் போன் செய்து விளையாடுகின்றனர் என அசைன் முகமது நம்பவில்லை. பின்பு ஆன்லைனில் சரிபார்த்த போது தனது நம்பர் அதில் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனதால் என்ன செய்வது என்று தெரியவில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.