ஜலந்தரில் உள்ள ஷாகோட் நகரில் ஒரு பெண் தனது மாமியாரிடம் 6 வயது மகன் பாசமாக இருந்தது தாங்க முடியாமல் சாகும் வரை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குல்விந்தர் கவுர் என்ற அந்த பெண்ணின் கணவர் இத்தாலியில் வசித்து வருகிறார். மாமியார் மகனுடன் ஜலந்தரில் உள்ள ஷாகோட் நகரில் வசித்து வரும் குல்விந்தர் கவுர் தனது மாமியாரிடம் அடிகடி சண்டை போட்டு வந்துள்ளார். சின்ன சின்ன விசயங்களுக்கும் பெரிய சண்டை வருவது வழக்கமாம்.
சம்பவத்தன்று இரவு சிறுவன் அரஷ்ப்ரீத் அலறல் சத்தம் கேட்டு பாட்டி ஓடி போய் பார்த்துள்ளார். அங்கு குல்விந்தர் கவுர் சிறுவனை கத்தியால் சாகும் வரை குத்தியுள்ளார். பின்பு அவளும் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும் சில காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து போலீசார் குல்விந்தர் கவுர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். குல்விந்தர் கவுரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன் மாமியாரிடம் நெருக்கமாக இருந்தது பிடிக்காமல் மகனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.