புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நெடியூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி காட்டுக்குள் வைத்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் குடும்ப பிரச்சனை சரி செய்வதற்காக பெற்ற பன்னீர் என்பவர் உறவினர்களுடன் சேர்ந்து தனது மூத்த மனைவியின் 13 வயது மகளை காட்டுக்குள் வைத்து கழுத்து நெரித்துக் கொலை செய்த வழக்கில் அவர்களுக்கு தூண்டுதலாக இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் மந்திரவாதி வசந்தி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பன்னீர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் குமார் அவரது மனைவி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பெண் மந்திரவாதியை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அவளிடம் விசாரித்தபோது கடந்த 20 ஆண்டுகளாக மந்திரவாதி தொழில் செய்வது தெரிய வந்துள்ளது.
மூத்த மனைவியின் மகளை பலி கொடுத்தால் குடும்பப் பிரச்சினை தீர்ந்து விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி வசந்தி பன்னீர் இந்த கொலை செய்ய தூண்டி உள்ளார் என்பது விசாரணையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும் வசந்தி இடமிருந்து ஃபோர்டு கார், விலை உயர்ந்த செல்போன், 56 பக்கங்கள் கொண்ட மாந்திரீக புத்தகம், வெள்ளை கோழிகள், மந்திர நூல் சுற்றிய தேங்காய் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது, இதற்கு முன் இதுபோன்ற கொலை சம்பவங்களில் வசந்திக்கு தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.