ஜாலி… இந்த மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்டங்கள் என ஏராளமான வரலாறுகளும் அதன்பின்னால் இருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 66 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது.

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளில் இருந்து குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அன்று மாவட்டம் முழுவதும் விடுமுறை தினமாக கொண்டாடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த உணவுகள் மூளைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம் ….!!

Fri Oct 28 , 2022
நம் உடலில் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒரு கொழுப்பு மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ். இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது. எனவே ஆற்றலை வழங்க தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மிக முக்கியமானது. நம் உடல் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை உறிஞ்சுவதற்கு கொழுப்பு உதவுகிறது. மேலும் கொழுப்பு நம் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க உதவுகிறது, உறுப்புகளைப் பாதுகாக்கிறது, செல் வளர்ச்சியை ஆதரிக்கிறது. கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த […]

You May Like