அந்தரங்க விடியோவை நண்பருக்கு அனுப்பி மிரட்டிய கணவன்! துணிச்சலாக போலீசில் புகார் கொடுத்த மனைவி!

கோபி அருகே மனைவியுடன் ஆனால் அந்தரங்க காட்சிகளை நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர் மத்திய அரசு பணியில் இருப்பதாக கூறி நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பழனி அருகே உள்ள பொட்டம்பட்டியைச் சார்ந்த கட்டின் துறை என்பவரது மகள் அபிதா முதுகலை பட்டதாரியான இவருக்கு கோபி அருகே உள்ள மொடச்சூர் செந்தில்நாதன் நகரைச் சார்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகன் லிவிங்ஸ்டன் ஜெயபால் என்பவருக்கும் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது லிவிங்ஸ்டன் ஜெயபால் மத்திய மத்திய அரசு பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமான பின்பு ஜெயபால் குடும்பத்தினர் அபிதாவை வரதட்சனை கேட்டு கடுமையாக கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததுயடுத்து இந்தக் கொடுமை மேலும் அதிகரித்து இருக்கிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அபிதா தனது பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தூத்துக்குடி சார்ந்த எல்சன் என்பவர் அபிதாவை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு அவரது கணவர் ஜெயபால் மத்திய அரசு பணியில் இல்லை என்றும் மத்திய அரசு பணிகளுக்கு ஆட்களை சேர்த்து விடுவதாக கூறி பணமோசடி செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அபிதா மற்றும் அவரது பெற்றோர் இந்த விஷயம் தொடர்பாக ஜெயபாலிடம் கேட்டிருக்கின்றனர். இவர்களது கேள்வியால் கோபமடைந்த ஜெயபால் தன் மனைவி அபிதா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி இருக்கிறார். மேலும் தான் மத்திய அரசு பணியில் இல்லை என்ற விஷயம் வெளியே தெரிந்தால் தன் மனைவியுடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெளியிடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார். மேலும் அவர் தன் மனைவி அபிதா உடன் தனிமையில் இருக்கும் நேரங்களை திட்டபடடி வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அபிதா இது தொடர்பாக கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயபால் மீது புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் மேனகா ஜெயபால் மீது ஒன்பது பிரிவுகளில் கீழ் உனக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மத்திய அரசுப் பணியில் இல்லை என்பதும் மளிகை கடை நடத்தி வந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. தற்போது நீதிமன்ற உத்தரவின்படி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Baskar

Next Post

பிறந்த நாளன்று பரிதாபமாக இறந்து போன இளம்பெண்!

Tue Feb 14 , 2023
கேரள மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் விபத்து காரணமாக அவரது பிறந்த நாளன்று மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு தல பாடி பகுதியைச் சார்ந்தவர் ஜெயசீலா இவருக்கும் ரஞ்சன் என்பவருக்கும் கடந்த ஓராண்டுகளுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. இந்நிலையில் அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று அவரது பிறந்த நாள், வழக்கம்போல் பணிக்குச் […]

You May Like