தான்சானியா நாட்டை சேர்ந்த சுரங்க தொழிலாளி விலையுர்ந்த இரண்டு கற்களை கண்டுபிடித்து ஒரே நாளில் 25 கோடிக்கு சொந்தகாரார் ஆன சம்பவம் அந்த நாட்டு மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

தான்சானியா நாட்டை சேர்ந்த சுரங்க தொழிலாளி சானினியு லைசர். அவர் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் இரண்டு விலையுயர்ந்த கற்களை கண்டுபிடித்துள்ளார். ஆராய்ச்சியில் அது ‘டான்சனைட்’ எனப்படும் விலையுயர்ந்த இரத்தின கற்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனை அந்த நாட்டு அரசாங்கமே எடுத்துகொண்டு அவருக்கு சன்மானமாக 7.74 பில்லியன் தான்சனியன் சில்லிங்ஸ் கொடுத்துள்ளது. இது இந்திய பண மதிப்பில் 25 கோடிக்கும் மேல். உலக அளவில் கண்டறியப்பட்ட இரத்தின கற்களை விட இது தான் பெரியது என்றும் இதன் எடை 9.27 மற்றும் 5.8 கிலோ என கூறப்படுகிறது.
இது குறித்து கூறிய சானினியு லைசர் இதனை வைத்து பள்ளி, வணிக வாளகம் கட்டவுள்ளதாகவும் தான் படிக்கவில்லை என்பதால் என் பிள்ளைகள் இதனை முன்னெடுத்து நடத்துவார்கள் என்றும் கூறியுள்ளார். சாதாரண மனிதர் திடீரென கோடீஸ்வரர் ஆனது அந்த நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.