நாமக்கலில் ஒருவர் ரூ.30 லட்சத்தை திரும்பி கொடுக்காததால் அவரது நண்பனே கொன்று வீட்டில் புதைத்துள்ளார்.

நாமக்கல் வகுரம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (32) அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்திவருகிறார். அவருக்கு நரேஷ்குமார்(35) என்ற நாமக்கல்லை சேர்ந்த நண்பர் உண்டு. நரேஷ் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தினேஷிடம் ரூ.30 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். தினேஷ் பலமுறை கேட்டும் நரேஷ் பணத்தை திரும்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி தினேஷ் மது விருந்துக்காக நரேஷை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.அங்கு ஏற்கனவே தினேஷின் நண்பர்கள் அஜித்குமார்(23), மதன்ராஜ் (21) இருந்துள்ளனர். திட்டம் போட்டபடி தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நரேஷை கத்தியால் குத்தி வீட்டிலிலேயே புதைத்துள்ளனர்.

இதில் தினேஷ் நேற்று மாலை வகுரம்பட்டி வீ.ஏ.ஓ. தமிழரசியிடம் சரணடைந்துள்ளார். பின்பு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு நரேஷின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனனர்.