ராஜஸ்தானில் திருமணமாகி குழந்தை இல்லாத ஒரு பெண்ணை அவளது மாமனாரும் மைத்துனரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் ஜல்ராபத்தானில் உள்ள பால்தா பகுதியில் உள்ள பெண் தன் கணவர் பிரதான்சிங்குடன் வசித்து வருகிறார். கூட்டுக்குடும்பமாக வாழும் இவர்களுடன் மாமனார் பரத் சிங் மற்றும் மைத்துனர் மகேந்திர சிங் இருந்துள்ளனர். திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தால் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார் அந்த பெண்.
இந்த வேளையில் அவளது மாமனாரும் மைத்துனரும் தொடர்ந்து அவளை பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இது குறித்து அந்த பெண் கணவனிடம் கூறியும் அவர் இதை கண்டுக்கொள்ளவில்லை. இது குறித்து வெளியே சொன்னால் அந்த பெண்ணை கொலை செய்து விடுவோம் என அவர்கள் மிரட்டலும் விடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல துணித்து, காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் அவர்கள் மூவர் மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.